Blogger Widgets

செவ்வாய், 16 ஜூலை, 2013

வெள்ளி விழா ஆண்டில் பா.ம.க: வெற்றிகள் விரைவில் குவியும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

வெள்ளி விழா ஆண்டில் பா.ம.க: வெற்றிகள் விரைவில் குவியும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
=================================================
சென்னை மெரீனாக் கடற்கரை சீரணி அரங்கத்தில், சமூக நீதி, சமத்துவம், சனநாயகம், மனித உரிமை ஆகிய முழக்கங்களுடன் 16.07.1989-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் 25 ஆண்டு கால அரசியல் பயணத்தை சற்றே பின்னோக்கிப் பார்க்கும் போது, தமிழக மக்களின் நலனுக்காக  ஆற்றிவரும் பணிகள், படைத்த சாதனைகள், நடத்திய போராட்டங்கள் ஆகியவை, பா.ம.க. எதற்காக தொடங்கப்பட்டதோஅந்த நோக்கத்திலிருந்து விலகிச் செல்லவில்லை என்பதை தெளிவாக்குகின்றன.
தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும்  வழங்கப்படும், தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும், அனைத்து மக்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தேன். அன்று முதல் இன்று வரை இந்த லட்சியங்களை எட்டவும், மக்கள் நலனுக்கான  திட்டங்களை செயல்படுத்தவும், மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்கவும் பா.ம.க. துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.
1989-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி அதன்பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதன் செல்வாக்கை அதிகரித்தே வந்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை பா.ம.க. இன்னும் பெறவில்லை என்றாலும் ஆட்சியாளர்களின் தோளைப் பிடித்து உலுக்கி மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தி வந்திருக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து துணை நகரம் அமைக்கும் திட்டம், சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஏழை மக்களின் நிலங்களை பறிக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வளங்களைச் சுரண்டும் வகையில் அமைக்கப்படவிருந்த டாட்டா டைட்டானியம் தொழிற்சாலைத் திட்டம் ஆகியவற்றை முறியடித்து லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்தது- தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுவதற்கு காரணமாக இருந்தது- மக்களை சீரழிக்கும் சாலையோர மதுக்கடைகள் மூடப்படுவதற்கு காரணமாக இருந்தது என எண்ணற்ற நன்மைகளை மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்திருப்பது மிகவும்  மகிழ்ச்சியளிக்கிறது.

1998 முதல் 2009-ஆம் ஆண்டு வரை மத்திய அரசில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்திற்காக எண்ணற்றத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. உலகமே போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டம், அரசு மருத்துவமனைகளின் அடிப்படையையே மாற்றியமைத்த தேசிய ஊரக சுகாதார இயக்கம், தமிழக மருத்துவத் திட்டங்களுக்கும் எந்த அரசும் செய்யாத வகையில் மொத்தம் ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது, சேலம் மற்றும் மதுரையில் தில்லி எய்ம்ஸ்க்கு இணையான மருத்துவமனைகள், பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதித்ததுடன், புகையிலைப் பொருட்களுக்கு முடிவு கட்ட காரணமாக அமைந்தது, தமிழ்நாட்டில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குக் கூட மீட்டர் கேஜ் பாதை இல்லாமல் அனைத்து பாதைகளையும் அகலப்பாதைகளாக்கியது, சேலம் ரயில்வேக் கோட்டம் அமைத்தது என பா.ம.க. சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் தமிழக நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் எண்ணிலடங்காதவை. பாட்டாளி மக்கள் கட்சியின்  கைகளில் நிர்வாகம் வழங்கப்பட்டால் அது பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய பணிகள் இவை. இவற்றுக்கு காரணமான மருத்துவர் அன்புமணி இராமதாசை அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் முதல் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் வரை பாராட்டியதே இந்த சாதனைகளின் சிறப்பைக் கூறும்.
மக்கள் நலனை நோக்கிய பயணத்தில் பா.ம.க. சாதித்தவை அதிகம் என்ற போதிலும் சில சறுக்கல்களும் இல்லாமல் இல்லை. 1989-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பா.ம.க. தனித்து போட்டியிட்டு அதன் செல்வாக்கை வளர்த்து வந்தது.  அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில், தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திராவிடக் கட்சிகளுடன்  மாறி மாறி கூட்டணி அமைத்ததன் மூலம் பா.ம.க.வின் வளர்ச்சி தடைபட்டது.
இதை உணர்ந்து தான் இனி வரும்  தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதென 2 ஆண்டுகளுக்கு முன்பு 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் உறுதியான முடிவு எடுக்கப்பட்டது. அதில் உறுதியாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி,‘‘புதிய அரசியல் ... புதிய நம்பிக்கை’’ என்ற புதிய பாதையில் வீறு நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் பா.ம.க.வுக்கு ஆதரவு பெருகிவருவதை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் சக்திகள் நம் மீது அவதூறு குற்றச்சாற்றுகளை சுமத்தின. மரக்காணத்தில் கலவரம் நடத்தியோரை விட்டுவிட்டு, நீதி கேட்டதற்காக என்னையும், 8,000-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினரையும் கைது செய்து மகிழ்ந்தனர் ஆட்சியாளர்கள். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 122 பேரை குண்டர் சட்டம் மற்றும் தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து இன்புற்றனர். இந்த சதி வலைகளை எல்லாம் அறுத்தெரிந்து எழுந்துள்ள  பாட்டாளி மக்கள் கட்சி, இனி வரும் தேர்தல்களில் திராவிட கட்சிகள், தேசியக் கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைப்பதில் உறுதியாக உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி அதன் 25-ஆம் ஆண்டில்  காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில்,  அது சந்தித்து வந்த சோதனைகள் சுக்குநூறாக சிதறுவது உறுதி. வெள்ளிவிழா ஆண்டு நாம் வெற்றிகளை குவிப்பதற்கான அடித்தளமாக அமையும். 25 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் நலனுக்கு எவையெல்லாம் தேவை என பாட்டாளி மக்கள் கட்சி கருதியதோ, அவையெல்லாம் இன்னும் நிறைவேற்றப்படாமல் தான் உள்ளன. 46 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் மது, இலவசம், திரைப்படம் ஆகிய கலாச்சாரங்களால் சீரழிந்த தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் - காலம் இட்ட கட்டளைப்படி 2016-ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி, திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி எங்களின் பயணம் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 11 ஜூலை, 2013

பாட்டாளி மக்கள் கட்சியின் பாடல்கள்:

பாட்டாளி மக்கள் கட்சியில் பாடல்கள் :


  • வன்னியர் சங்க மற்றும் பாடலை மக்கள் கட்சியில் பாடலகள் இப்போது இணையதளத்திலும் கிடைகிறது இங்கே நீங்கள் இலவசமாக download செய்து கொள்ளலாம்.

  • மொத்தம் நான்கு cdக்கள் அடங்கியுள்ளது. அதுனைடிய இனிப்புகள் கீழே 


PMK Songs Link -1



நீங்கள் இந்த இணைப்பை கிழக் செய்தவுடன் இன்னொரு new tabல் open ஆகும் 

அதில் skip ad கொடுக்கவும் இப்போது நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்  





                          




புதன், 10 ஜூலை, 2013

தர்மபுரி தற்கொலையும் வன்னியர்களுக்கு எதிரான சதிச்செயலும்.

தர்மபுரி தற்கொலையும் வன்னியர்களுக்கு எதிரான சதிச்செயலும்.

தர்மபுரியில் தற்கொலை செய்துகொண்ட இளவரசன் 'தனது சாவுக்கு யாரும் காரணமில்லை' என்று கடிதம் எழுதிவைத்துள்ளதாக தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். (இளவரசனின் நோட்டுப்புத்தகங்களில் உள்ள கையெழுத்தை ஒப்பிட்டு இது அவர் எழுதிய கடிதம்தான் என உறுதிபடுத்தியுள்ளனர்.(FIRSTPOST: The SP said they had recovered the letter based on ‘secret’ information. He claimed the handwriting in the letter matched that in the notebooks used in college by Ilavarasan.) கூடவே, அறிவியல்பூர்வமான மேல் ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர்)

காவல்துறையினர் இளவரசன் உடலை கைப்பற்றுவதற்கு முன்பாக, அவரது உறவினர்களே இளவரசன் பையிலிருந்த நான்கு பக்க கடிதத்தை எடுத்து மறைத்து வைத்திருந்ததாகவும் - அதனை காவல்துறையினர் உரிய புலனாய்வு விசாரணைகள் மூலம் கண்டறிந்து கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கடிதத்தினை அவர்களது உறவினர்களிடையே சுற்றுக்கும் விட்டுள்ளனர். (TIMES OF INDIA:Dharmapuri superintendent of police Asra Garg told, "We came across information that a suicide note left behind by the deceased was in circulation...we have been able to retrieve the note.")
இளவரசன் பையிலிருந்து கடிதத்தை திருடிய குற்றத்திற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.. (இவர்களில் எவரும் வன்னியர் இல்லை)

இளவரசன் கொலைதான் செய்யப்பட்டார் என்கிற நாடகத்தை அரங்கேற்றி, பாமக மீது பழி சுமத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முக்கிய பிரமுகர்களுக்கு இந்த கடித விவரம் ஏற்கனவே தெரியும் என்று தருமபுரியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியானால், இளவரசன் எழுதிய கடிதத்தை திருடி மறைத்து வைத்துக் கொண்டு, இது கொலைதான் என சாதித்து, உடலை மீண்டும் பிரேதபரிசோதனை நடத்த வேண்டும் எனப் போராட்டம் நடத்திவருவது ஏன்? இதன் மூலம் - இந்த புரட்சிக்கூட்டம் எதை சாதிக்க நினைக்கிறது? இந்த வெட்கம்கெட்ட வேலை எதற்காக?

பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் வன்னியர்கள் மீதும் பழிபோட வேண்டும் என்கிற சதி தவிர இதில் வேறு எதுவும் இல்லை.

தருமபுரி விவகாரத்தில் பாமகவில் பங்கு என்ன?

தர்மபுரி கலவரம், அது தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர்களும் அபாண்டமாக பழி சுமத்தப்படுகின்றனர். இந்த சம்பவத்தில் மூன்று தேதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஒன்று, தருமபுரி சம்பவம் நடந்த நவம்பர் 7, 2012. அடுத்தது திவ்யா அந்த பையனிடமிருந்து பிரிந்துவந்த ஜூன் 4, 2013. மூன்றாவது 'இனி நான் அவனுடன் செல்லமாட்டேன்' என திவ்யா பேட்டி கொடுத்த ஜூலை 3, 2013. இந்த மூன்று நிகழ்வுகளிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை.
1. நவம்பர் 7, 2012 அன்று திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து கலவரம் நடந்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பல்வேறு சாதியினரும் பல்வேறு கட்சியினரும் இருந்தனர். தற்கொலை செய்துகொண்ட நாகராஜ் தேமுதிக கட்சிக்காரர். கலவரத்திற்காக கைது செய்யப்பட்டவர்களில் பல சாதியினரும் பலகட்சியினரும் இருந்தனர். ஆனால், முற்போக்கு கூட்டம் - பாட்டாளி மக்கள் கட்சியை மட்டுமே குற்றம் சாட்டியது.

கலவரம் காரணமாக ஊரில் ஆண்களே இல்லாத நிலையில், நாகரஜன் உடலை அடக்கம் பண்ணக்கூட எவரும் முன்வரவில்லை. எனவே, பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் தலையிட்டு தாங்களே அடக்கம் செய்தனர். தேமுதிக கட்சியை செர்ந்தவராக இருந்தாலும் அநாதைப் பிணமாக ஆகிவிடக் கூடாது என பாமக இதில் தலையிட்டது. இதன் மூலம் வன்னியர்கள் பாதிக்கப்படும் போது பாமக தவிர வேறு எந்த ஒரு கட்சியும் துணைக்கு வராது என்பது நிரூபனமானது.

2. ஜூன் 4, 2013 அன்று திவ்யா அந்த பையனிடமிருந்து பிரிந்து அவரது அம்மாவிடம் வந்தார். அதற்கு முன்பு மார்ச் மாதத்தில் 'என்னை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள்' என்று திவ்யா செல்பேசி மூலம் அழுததன் காரணமாக அவரது அம்மா தேன்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவருக்காக பாமக வழக்கறிஞர் பாலு ஆஜரானார். (எப்படி இளவரசன் தரப்புக்காக தலித் கட்சி வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஏன் ஆஜரானார் என கேட்க எவருக்கும் உரிமை இல்லையோ, அதே போன்று பாமக வழக்கறிஞர் பாலு இதில் ஏன் ஆஜரானார் என கேள்வி கேட்க ஒருவருக்கும் உரிமை இல்லை.)

ஜூன் 4, அன்று தன்னிடம் வந்த திவ்யாவை, அவரது அம்மா தாக்கல் செய்த வழக்கிற்காக ஜூன் 6 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நேர்நிறுத்தினர். அவர் அம்மாவுடன் செல்ல விரும்புவதாகக் கூறினார்.
ஆனால், இதனை 'திவ்யாவை பாமகவினர் கடத்தினர்' என முற்போக்குக் கூட்டம் அவதூறு பரப்பினர். இப்போது காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ள திவ்யாவிடம் - அவரை பாமகவினர் கடத்தினார்களா என்பதைக் கேட்டு, இந்த முற்போக்குக் கூட்டம் அது உண்மைதானா என்பதை உலகிற்கு சொல்லட்டுமே.

3. ஜூலை 3, அன்று 'இனி நான் அவனுடன் செல்லமாட்டேன்' என திவ்யா பேட்டி கொடுத்தார். இதற்கும் பாமகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஜூலை 1 அன்று நீதியரசர்கள் முன்பு திவ்யா என்ன சொன்னார் என்பதை பத்திரிகைகள் தமது விருப்பம் போல திரித்து எழுதியதை திவ்யா மறுத்து பேசினார். இதற்கு பாமக எப்படி பொறுப்பேற்க முடியும்?

பாமகவினர்தான் இவ்வாறு பேச வைத்தார்கள் என்று சொல்லும் இந்த முற்போக்குக் கூட்டம்,இப்போது காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ள திவ்யாவிடம் கேட்டு, அது உண்மைதானா என்பதை உலகிற்கு சொல்லட்டும்.

உண்மை வெல்லும்
  • காவல்துறையிடம் பாதுகாப்புக் கோரினால், இளவரசனுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் - இளவரசன் தரப்பினர் எதற்காக பாதுகாப்புக் கோரவில்லை?
  • திவ்யா அவராக விரும்பி இளவரசனுடன் சென்றார். திவ்யா அவரது சுய விருப்பத்தின் காரணமாகவே இளவரசனிடம் இருந்து பிரிந்தார். அம்மாவா காதலனா என்கிற குழப்பம் அவருக்கு ஏற்பட்டிருக்குமானால் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும்? யாருடன் செல்வது யாருடன் வாழ்வது என முடிவெடுக்கும் உரிமை அந்த பெண்ணிற்கு இருக்கிறதா இல்லையா?
  • கடந்த நான்கு நாட்களாக இளவரசன் மரணம் குறித்த பல்வேறு விவாதஙகளை தொலைக்காட்சிகள் நடத்தின. தமிழகத்தின் தலைசிறந்த மேதாவிகளாக தங்களைக் காட்டிக்கொள்கிறவர்கள் பேசினார்கள். அது கொலையாக இருக்கலாம் எனவும் அதற்கு பா.ம.க காரணமாக இருக்கலாம் எனவும் பலர் கூச்சலிட்டார்கள். உண்மை வெளி வரட்டும் என பாமக அமைதி காத்தது. 
இன்று உண்மை வெளிப்பட்டு இருக்கிறது. இளவரசனின் மரணம் தற்கொலை என்பது நீருபிக்கப் பட்டிருக்கிறது. இதற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பாட்டாளி மக்கள் கட்சியினர்தான் கொலைசெய்திருப்பார்கள் என்று அவதூறு பரப்பிய ஊடகங்களும் அறிவுஜீவிக்கூட்டமும் இப்போது உண்மையை பேசாமல் மவுனம் காப்பது ஏன்?


(நன்றி அருள்பசுமை)